September 29, 2022

2022 ஆம் நிதியாண்டிற்கான வரவு – செலவுத்திட்டத்தை நவம்பர் 12 ஆம் திகதி பாராளுதன்றத்தில் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் நவம்பர் 12 ஆம் திகதி வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றாம் வாசிப்பின் பின்னர், டிசம்பர் 10 ஆம் திகதி வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2022 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (07) சமர்ப்பிக்கப்பட்டது. (Kandy Tamil News)

Leave a Reply

Your email address will not be published.