புதிய உத்வேகத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்குத் தாம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
72 ஆவது இராணுவத் தின கொண்டாட்டத்தில் இன்று (10) கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மக்கள் தன்னிடம் இருநதும், அரசாங்கத்திடம் இருந்தும் எதிர்ப்பார்த்த விடயங்களை, அவ்வாறே நிறைவேற்றுவதற்கு முடியாமல் போனதையிட்டு அதிருப்தி ஏற்பட்டுள்ளமையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் முழுமையான உரை கீழே தரப்பட்டுள்ளது.

