கொவிட்-19 பரவுளை இன்னும் முழுமையாக தனிந்துவிடவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன கூறியுள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றி்ல் இன்று (18)  இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

நாடு திறக்கப்பட்டுள்ள நிலைமையின் கீழ், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் இன்னும் முற்றாக தளர்த்தப்படவில்லை. 

எனினும், எதிர்வரும் டிசம்பர் மாத இறுதி வரையேனும் கொவிட் தொடர்பிலான வரையரைகளை பொது மக்கள் பின்பற்ற வேண்டும் என இதன்போது கேட்டுக்கொண்டார்.

புதுவருடத்தின் பின்னர் மக்கள் தேவையற்ற சுற்றுலாக்களை மேற்கொண்டதன் காரணமாகவே நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீரென அதிகரிப்பு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு பொதுமக்கள் செயற்பட வேண்டியது மிக அவசியமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன  மேலும் தெரிவித்துள்ளார். (kandytamilnews.com)

Post a Comment

Previous Post Next Post